மாணவர்கள் சிரமத்துக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், CBSE-க்கும் நோட்டீஸ் | POLIMER NEWS


நீட் தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்கள் சிரமத்துக்குள்ளாக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், சிபிஎஸ்இக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 685 மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது என ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும், தேர்வு அழுத்தத்தோடு மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழிக்க வைத்தது குறித்தும் தாமாக முன்வந்து விசாரிப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச் சென்ற தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்க ஏற்பாடு செய்யாதது குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சி.பி.எஸ்.இ., தலைவர், செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments