பொய் வழக்கு போட்ட எஸ்.பி. தர்மராஜ் மற்றும் அதற்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் ஒருவர் தன் தலையின் வலது பக்கத்தில் மட்டும் மொட்டை அடித்து கொண்டததோடு, அதே பக்கத்தின் ஒரு பகுதி மீசையை எடுத்து கொண்டும் நீதிமன்றத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

WARDROBE REFRESH SALE 21-24 JUNE
WARDROBE REFRESH SALE 21-24 JUNE
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே நெம்மேலி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டு இயக்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் காலை 11 மணிக்கு மேல் தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது தனது தலையில் வலது பக்கம் மட்டும் மொட்டையடித்துக் கொண்டு, அதே பக்கத்தில் ஒரு பகுதி மீசையை எடுத்துக் கொண்டும் கோர்டுக்கு வந்தவர் நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் முன்பு ஆஜரானார். நீதிபதி அவரை வரும் ஜூலை மாதம் 25ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டதை தொடர்ந்து ஜெயக்குமார் தனது வக்கீல் உதயசூரியனுடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்தவரிடம் பேசினோம்.
``கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த 3 பேர் ஜாதி பெயரை சொல்லி தாக்கியதில் ஒரத்தநாடு சமயன்குடிக்காட்டைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்து மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை சமயன்குடிக்காட்டைச் சேர்ந்த விக்னேஷ் தனது நண்பருடன் பார்த்து விட்டு வந்தார். அப்போது ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த நான்(ஜெயக்குமார்) மற்றும் எனது நண்பர்கள் 10 பேர் சேர்ந்து விக்னேஷை வழிமறித்து ஜாதி பெயரைச்சொல்லி தாக்கியதாகவும், அவரை கடத்தி சென்று எங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நீங்கள் சென்று பார்த்தது தவறு என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த சமயத்தில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில் ஒரத்தநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது தஞ்சை எஸ்.பியாக இருந்த தர்மராஜன், ஒரத்தநாடு டி.எஸ்.பியாக இருந்த செங்கமலகண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் என்மீது ஒரத்தநாடு போலீஸார் பொய்யாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் 7 வழக்குகள் பதிவு செய்து இரவோடு இரவாக என்னை தேடி வந்து, ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பது போல் என்னை பிடித்து சென்றனர். நான் 12 நாள்கள் பட்டுக்கோட்டை சிறையில் இருந்தேன். ஜாமீனில் வெளிவந்த நான், ஒரு மாத காலம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டும் வந்தேன்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு எனக்கு சம்மன் வந்தது. எனது சொந்த ஊர் பாப்பாநாடு அருகே நெம்மேலி வடக்கு. ஆனால் போலீஸார் பொய்யான வழக்கு பதிவு செய்வதற்காக ஒக்கநாடு மேலையூர் என்று எனது முகவரியை தவறாக பதிவு செய்தனர். தஞ்சையில் எஸ்.பியாக இருந்த தர்மராஜன், ஒரத்தநாட்டில் டி.எஸ்.பியாக இருந்த செங்கமலகண்ணன் ஆகிய இருவரும்தான் என் மீது பொய் வழக்கு போட்டனர். இதை கண்டித்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஒரத்தநாட்டில் அப்பொழுது உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
Comments
Post a Comment