முஸ்லீம் மதகுருவை சரமாரியாக தாக்கிய மர்மநபர்கள்: மருத்துவமனையில் அனுமதி | NEWS24



ஜார்கண்ட்: முஸ்லீம் மதகுருவை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ரான்சியில் மாலை பிராத்தனை முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும் போது முஸ்லீம் மதகுருவை சிலர் சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுமாறும் அச்சுறுத்தினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறுகையில், அனைவரும் அமைதியைக் காக்க வேண்டும் என்றும், மேலும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார். 

Comments