நிலவின் துகளை நாசா என்னிடமிருந்து அபகரிக்க பார்க்கிறது.. வழக்கு தொடுத்து பகீர் கிளப்பிய பெண் | NEWS24
நியூயார்க்: தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்ற பெண் நியூயார்க் நீதி மன்றத்தில் நாசாவிற்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளார். அவர் தன்னிடம் நிலவின் பாகங்கள் இருப்பதாக கூறியுள்ளார். நாசா எப்போதும் மக்களிடம் இருந்து பொருட்களை அபகரிப்பது போல தன்னிடம் இருந்து பொருட்களை அபகரிக்க இருப்பதாக கூறியுள்ளார். அவர் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்
ஜூலை 20, 1969, உலகம் அதுவரை காணாத பெரிய அதிசயத்தை கண்டது. அதுவரை ஆகாயத்தை பார்த்து கதை சொல்லிக்கொண்டு இருந்த மனிதன், முதல் முதலாக தன்னுடைய வரலாற்று கதையை எழுதினான். நிலவில் அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்க், பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் தன்னுடைய கால்களை பதித்தனர். அப்போலோ 11 மூலம் அவர் தரையிறங்கினார்கள்.
பரிசு கொடுத்தனர்
இந்த நிலையில் பூமிக்கு திரும்பி வந்த ஆம்ஸ்ட்ராங்க், நிலவில் இருந்து எடுத்து வந்த சில துகள்களை, சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா பெண்ணின் அப்பாவிற்கு பரிசளித்துள்ளார். 1970 வாக்கில் அவர் இந்த பரிசை அளித்துள்ளார். அப்போதில் இருந்து நிலவின் துகள்கள் அந்த பெண்ணிடம்தான் இருந்துள்ளது.
கேட்டார்கள்
இதேபோல் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பொருட்களை சிலர் பரிசாக சிலருக்கு அளித்துள்ளனர். இந்த பொருட்களை எல்லாம் நாசா கைப்பற்றி வருகிறது. நாசா உருவாக்கும் அருங்காட்சியகத்தில் இந்த பொருட்களை வைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக பலரிடம் வழக்கு தொடுத்து பொருட்களை கைப்பற்றியுள்ளனர். சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்காவிடமும் அவர்கள் பொருட்களை கேட்டுள்ளனர்.
மறுப்பு வழக்கு
இதற்கு லாரா சிக்கா மறுப்பு தெரிவித்துள்ளார். நிலவு என்பது நாசாவின் சொத்து கிடையாது என்றுள்ளார். அது தன் தந்தைக்கு, ஆம்ஸ்ட்ராங்க் கொடுத்த பரிசு. அது தனிநபர் சொத்து அதை நாசா கேட்க முடியாது என்றுள்ளார். இதனால் நிலவின் துகளை கைப்பற்ற முடியாமல் நாசா குழம்பி வருகிறது.
REFERENCE | Click Here
Comments
Post a Comment