
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து சேலத்திற்கு 277 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் சீர்க்காடு பகுதியில் நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகள் முன்னிலையில், விவசாயி வடிவேல் குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதே போல், சீரிக்காடு பகுதியில் நாராயணன் தோட்டத்தில் அளவிட முயன்றபோது, அவருடைய சகோதரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது
இதனிடையே, ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நிலஅளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த இயற்கை பாதுகாப்பு குழுவின் தலைவரும், கல்லூரி மாணவியுமான வளர்மதி, பொதுமக்களுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனாலும் வளர்மதி தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அவரை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
Comments
Post a Comment